லண்டனில் பாரிய தீ விபத்து!
கிழக்கு லண்டனிலுள்ள புதிய கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த பகுதிக்கு அவசர உதவி தேவைப்படுவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
தரையில் இருந்து ஆறாவது மாடி வரை தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 15 தீயணைப்பு வாகனங்களும் 100 தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய நேரப்படி 3.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுவொரு மிகப்பெரிய தீ விபத்து என லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு செல்லும் அனைத்து வீதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்தை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் குவிந்துள்ளதாகவும் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
தீ பற்றியமைக்கான காரணம் என்ன என இன்னமும் கண்டுபிடிக்கவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.