இலங்கை வரவுள்ள அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர்.
அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 30 திகதி வரை இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அத்துடன் அவர், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் குண்டு தாக்குதல்களை அடுத்து, அமெரிக்கா, தனது புலனாய்வு விசாரணையாளர்களை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.