தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து செயற்பட்டதாக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் சஹ்ரான் என்ற நபர் பாரம்பரிய முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான 120 வீடுகளுக்கு தீவைத்தார்.
அப்படியான நிலைமையில், பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியும் சஹ்ரானை கைது செய்யவில்லை.
கைது செய்ய முயற்சித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டதால், பாரம்பரிய முஸ்லிம் மக்கள் வழங்கிய முறைப்பாடுகளை ஏற்காமல் அவர்களை விரட்டியத்தனர். முறைப்பாடு செய்தவர்களை கைது செய்தனர்.
சாட்சியமளிக்க வருமாறு கூறியதால், வந்தேன். சாட்சியங்களை எடுத்துவர போதுமான நேரம் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும் குண்டு தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நான் சஹ்ரான் பற்றி கூறினேன் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.