ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்..ஓர் படைப்பாளியின் பார்வை

இணுவையூர் மயூரனின்…
ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்

கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் எனும் இக்கவிதைத்தொகுப்பு.

மயூரன் தன் பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர். இவரை கவிஞர் மயூரன் என்பதை விட இணுவையூர் மயூரன் என்று சொல்வதில் தான் அவருக்கு ம் அவர் பிறந்த மண்ணுக்கும் பெறுமையே..

தமிழ் இன உணர்வுடன் நம் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையை கவிக்கண் கொண்டு ரசித்து வடித்த கவிதைகள் நன்று.

இந்தச் சந்ததி காணாத வாழ்வு எனும் கவியும் தொலைந்தவை அல்ல தொலைத்தவை எனும் கவியும் படிக்கும் போது என் கண்கள் ஏனோ கண்ணீர் சுமக்கின்றன. எங்களுக்கும் சிறகுகள் முளைத்து சிட்டாக திரிந்ததொருகாலம் அந்த காலத்தை நினைவு படுத்தியது. ஆனால் எம் பிள்ளைகள் இங்கு கூண்டுக்கிளிகளாக வாழ்கிறார்கள்.என்ன தான் வசதிகள் இருந்தாலும் பொற்கூடும் சிறைதானே..? என்பதை மயூரன் கவிதையில் அழகாக கூறியுள்ளார்.

சில கவிதைகளை வாசிக்கும் போது எங்கோ சில வார்த்தைகள் நம் மண்ணில் நாம் தொலைத்த வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஊசி இலை என் மனதையும் குத்துகிறது.

நான் என்ற கவி மயூரன் தன்னை மற்றவர்களைவிட மாறுபட்டவன் என்று கூறுகிறார்.

மயூரன் எழுதிய நாற்பது கவிதைகளும் அவரின் தாய்மண்ணை விட்டு அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்துகின்றன.

மயூரனின் தமிழ்ப்பற்றைப் பறை சாற்றி நிற்கிறது அவரது கவிதைகள் அந்நூலுக்கு கவிகள் மட்டுமல்ல படங்களும் உருதிபடுத்துகின்றன.

தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்தாக இருக்கட்டும்.

ஒரு வாசகியாக உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகின்றேன்.

என்றும் அன்புடன்
சிந்துகவி…?

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net