கொரோனா வைரஸ்: பிரான்ஸ் நிலவரம் 08/04/2020

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம்
சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை:

08/04/2020 இரவு 07:35 மணி: பிரான்சில் கிருமி தொற்று அதிகரித்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 10,869 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,048 ஆக உயர்ந்தது,

இன்று புதன்கிழமை மாலை, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 541 பேர் இறந்ததாகவும் 3,881பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்,

கடுமையான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் 7,148 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் அதிகம்,தீவிர சிகிச்சையில் உள்ளவர்களில், 30 வயதிற்குட்பட்ட 108 இளைஞர்கள் உள்ளனர்.

பிரான்சில் இப்போது மருத்துவமனை தரவுகளின்படி 7,632 பேர் மருத்துவமனையில் மரணம் மற்றும் 24 மணி நேரத்தில் 541 பேர் இறந்துள்ளனர். இறப்புகளில் 82% 70வயதுக்கும் மேற்பட்டவர்கள்,

இதில் மருத்துவமனையில் 7,632 பேர் இறந்து (+541) உள்ளனர். கணினி பிழை காரணமாக வயோதிப பராமரிப்பு மருத்துவ-சமூக நிறுவனங்களின் தரவைப் புதுப்பிக்க முடியவில்லை. ஆக மொத்தம் 3,237 பேர் இறந்துள்ளனர்.

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை (கடந்த 24 மணிநேரத்தில் 348 பேர்) இப்போது 30,375

மற்றும் 21,254 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணி நேரத்தில் 1,917).

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net