தமிழ்த்தாய் அந்தாதி.

நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும் வழங்கப்படல் தேவை. மொழியின் செழுமையை ரசிக்கவும், மொழியின் முழுமையை பயிலவும், அது அவசியம். கவிதை, ஓர் அழகியர் கலை வடிவம்தானே.

அது குறித்தே பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதி பற்றி முன்னர் எழுதியிருந்தேன்.

பாவலர் தவ சஜிதரனின் தமிழ்த்தாய் அந்தாதியை, தமிழில் மரபுக்கவிதை வடிவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முன்னெடுப்பாக நாம் பார்க்கலாம். விரிவான மொழியறிவும், பரந்த சொல்லறிவும், ஆழமான யாப்பிலக்கணத் தெளிவும் இருக்கும் ஒருவர் கையில் இந்தப் பணியைக் காலம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சி.

முன்னமே நான் கூறியதுபோல, மரபுக் கவிதை யாப்பு பற்றிய கல்வி, யாக்கும் கல்வி மட்டுமன்று. இருக்கும் பாடல்களை ரசிக்க உதவும், சந்தத்துடன் பாட உதவும், பொருள் பிரிக்க உதவும் கல்வி. யாப்பிலக்கணம் அறிந்தோர் வெகு சிலரே. அதைப் போதிக்கும் மனம் கனிந்தோர் அதிலும் குறைவே.
திரு தவ சஜிதரனின் மொழியகத்தில் (https://moliyagam.org/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) செய்யுட் கவிதை நுட்பமும் சொல்லித் தருகிறார். ஒரு நீண்டகால நோக்கில், நெடும் தமிழ்ப் பணியின் தொடக்கமாகத் தான் இந்தத் தமிழ்த்தாய் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார் என்று உணர முடிகிறது.

வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு தளங்களில் தமிழின் இருப்பை உறுதி செய்யும் கடமையை காலம் நமக்கு வழங்கியிருக்கிறது.

தமிழ் வாழும்.

❤️

கீழே இருப்பது தமிழ்த்தாய் அந்தாதியின் இரு பாடல்களின் ஒளி வடிவம்.

Music & vocal:
Sathish Ramdas
Lyrics:
Thava Sajitharan மொழியகம்
Featuring
Kavya Sathiyadas
Editing & graphics:
Thilojan VM

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net