வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும்.
பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.
-அமல்ராஜ் பிரான்சிஸ்
புத்தகத்தின் விலை 2336 ரூ.
வெண்பாவின் சிறப்புச் சலுகை விலை 1869 ரூ.
இலங்கையின் எப்பாகத்திலிருந்தாலும், புத்தகத்தை மூன்று வேலைநாட்களுக்குள் வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ளாம்.
வாட்ஸப் 076 291 2100
மெசெஞ்சரிலும் தொடர்புகொள்ளலாம்.