சீனப் பெண் இயக்குநரது படம்
அமெரிக்க ஒஸ்காரை வென்றது
“Nomadland” க்கு மூன்று விருதுகள்
அமெரிக்கர்களின் நவீன நாடோடி வாழ்க் கையைச் சித்தரிக்கின்ற ‘Nomadland’
சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார்
விருதை வென்றுள்ளது.அதனை இயக்
கிய சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கின்ற 39 வயதான இளம் பெண் இயக்குநர் Chloé Zhao சிறந்த இயக்குந
ருக்கான விருதைப் பெற்றுள்ளார். அதே படத்தில் பிரதான பாத்திரத்தில் தோன்
றிய Frances McDormand சிறந்த நடிகைக்
கான விருதை வென்றிருக்கிறார்.
மூன்று ஒஸ்கார் விருதுகளை தனதாக்
கிய இயக்குநர் Chloe Zhao, அமெரிக்கா
வினது அதி உயர் சினிமா விருதை வெல்
கின்ற முதல் வேற்று நிறப் பெண்ணா
வார்.அதேவேளை சிறந்த இயக்குநர்
விருதை வெல்கின்ற இரண்டாவது
பெண் என்ற பெருமையையும் அவர்
பெறுகிறார்.
2007-2009 காலப்பகுதியில் உலகெங்கும் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலை அமெரிக்கர்கள் பலரது தொழில் வாய்ப்புகளைப் பறித்தது. அவ்வாறு முதுமையில் தனது தொழிலையும் கணவரையும் இழந்த பிறகு நவீன நாடோடியாக மாறிய பெண் ஒருவரது கதையையே Nomadland சொல்கிறது.
வசிப்பிடங்களை இழந்து நாட்டுக்குள்
அங்கும் இங்குமாக பருவகால வேலை களைத்தேடிக்கொண்டு வாழ்க்கையை வாகனத்துடன் தெருக்களில் அனுபவித்
தவாறு தங்கள் அந்திம காலத்தைக் கடக்
கின்ற அமெரிக்க நாடோடிகளின் இன்ப துன்பங்களை திரையில் பதிவு செய்கின் றது ‘Nomadland’,
இப்படத்தின் திரைக்கதை அமெரிக்கப்
பத்திரிகையாளர் Jessica Bruder எழுதிய “21 ஆம் நூற்றாண்டில் தப்பிப் பிழைக்கும் அமெரிக்கா” (Surviving America in the Twenty-First Century ) என்ற யதார்த்த நாவ
லை அடிப்படையாகக் கொண்டு எழுதப்
பட்டது.
83 வயதான இங்கிலாந்தின் முதிர்ந்த நடிகர் Sir Anthony சிறந்த நடிகருக்கான
விருதையும், சிறந்த துணைப் பாத்திரத்
துக்கான விருதை பிரித்தானியாவின் முதல் கறுப்பின நடிகரான Kaluuya என்ப
வரும் பெறுகின்றனர்.
பெரும் தொற்றுநோய்ச் சூழ்நிலைக்கு
மத்தியில் 92 ஆவது ஒஸ்கார் சினிமா விருது வழங்கும் விழா நேற்றிரவு மட்டு ப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மிக அடக்
கமான முறையில் நடந்து முடிந்தது. மதிப்
புக்குரிய தங்கச் சிலை விருதுகளை வென்ற பலர் அவரவர் வதிவிடநாடுக
ளில் இருந்தவாறு இணைய வழியி
லேயே விழாவில் கலந்து கொண்டனர்.
தழுவல் திரைக் கதைக்கான (best adapted screenplay) ஒஸ்கார் விருதை வென்ற பிரெஞ்சு எழுத்தாளர் Florian Zeller, பாரி ஸில் இருந்தவாறே தனது தங்கச் சிலை யைப் பெற்றுக் கொண்டார்.
நாளாந்தம் மது அருந்தும் உயர் பள்ளி ஆசிரியர்களது குடிப் பழக்கம் அவர்களது
சொந்த வாழ்க்கையையும் தொழிலையும்
எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் காட்
டுகின்ற டெனிஷ் மொழித் திரைப்படம்
“Drunk” சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்
துக்கான விருதை வென்றது.
(படம் :சிறந்த நடிகை Frances McDormand
மற்றும் இயக்குநர் Chloé Zhao)
குமாரதாஸன். பாரிஸ்.