தடுப்பூசியை எதிர்ப்பவர்களது சந்தேகங்களுக்கு பதில் என்ன?
கட்டாயத் தடுப்பூசி பற்றிய வாதங்கள்
பிரதிவாதங்களைப் பரவலாகக் கேட்க முடிகிறது. மருத்துவ வசதிகளும் , தடுப்பூசிக் கொள்வனவு சக்தியும் அதிகம் உள்ள பிரான்ஸ் நாட்டிலே கூட இன்னமும் சனத்தொகையில் அரைவாசிப் பங்கினர்
ஊசி ஏற்ற முன்வரவில்லை.இதனால்
தடுப்பூசி ஏற்றியோர், ஏற்றாதவர் என்ற
இரண்டு வர்க்கங்கள் சமூகத்தில் உரு
வாகி வருகின்றன.
நாளாந்த செயற்பாடுகளுக்கு தடுப்பூசி
யைக் கட்டாயமாக்குவதன் மூலம் அதனை ஏற்றிக்கொள்ளுமாறு மக்கள்
மீது அரசுகள் அழுத்தத்தைப் பிரயோகிக்
கத் தொடங்கி உள்ளன. இதனால் தடுப்பூசி பற்றிய ஐயங்களுக்குப் பதில் கிடைக்க முன்னரே பலரும் ஊசி ஏற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிபர் மக்ரோனின் கட்டாய சுகாதாரப் பாஸ் திட்டத்தை எதிர்ப்போர் அதனை “சுகாதார சர்வாதிகாரம் (“health dictatorship”) என்று வர்ணிக்கின்றனர்.
அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும்
வெடித்துள்ளன. தனிமனித சுதந்திரத்
தையும் தடுப்பூசியின் அவசியத்தையும்
சமமாக எடைபோடுமாறு சில எதிர்க்கட்சி
கள் வலியுறுத்துகின்றன.
ஆனால் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமன்றி பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி யைக் கட்டாயமாக்குவதற்கு நாட்டின் மருத்துவ அக்கடமிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. “தடுப்பூசி ஏற்றுவது
ஓருவரது அரசியல் விருப்பு வெறுப்பு
அடிப்படைகளில் தீர்மானிக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு மனிதாபிமான
அடிப்படையிலான நற்பண்பு” என்று
பிரபல தொற்றுநோயியல் நிபுணர்
ஒருவர் கூறியிருக்கிறார்.ஆனால்
ஊசி மருந்து தாராளமாக இருந்தும்
ஏற்றிக் கொள்ள ஆட்கள் இல்லை என்ற
நிலைமையே அண்மைய நாட்கள் வரை
காணப்பட்டுவந்ததது.தற்போது கட்டாய
சுகாதாரப் பாஸ் நடைமுறை அறிவிக்கப்
பட்டதால் வேறு வழியின்றிப் பலரும்
தடுப்பூசி ஏற்றத் தொடங்கியுள்ளனர்.
தடுப்பூசியை எதிர்க்கின்றவர்கள் அல்லது தடுப்பூசி எதிர்ப்புவாத இயக்கத்தினர் பிரான்ஸில் மட்டுமன்றி எல்லா நாடுகளிலும் உள்ளனர். பிரான்ஸின் சனத் தொகையில் அவ்வாறான எதிர்ப்புவாதிகளது எண்ணிக்கை ஆக மூன்று சத வீதம் மட்டும் தான். பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதகாலம் கடந்துவிட்டது. ஆனால் நாட்டில் ஐம்பது வீதமானவர்கள் இன்னமும் ஒர் ஊசியைக் கூட ஏற்றிக் கொள்ள முன்வரவில்லை. அது ஏன்? அவர்கள் ஊசியை எதிர்க்கவில்லை. ஆனால் அதனை விரும்பவில்லை. அக்கறை இல்லை அல்லது அதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லது ஊசி பற்றிய மிகை அச்சங்கள். தெளி வற்ற நிலை. இவையே காரணங்களாக உள்ளன.
?தடுப்பூசி ஏற்றியவர்களும் தொற்றால்
உயிரிழக்கிறார்கள்-
?தடுப்பூசி ஏற்படுத்துகின்ற பக்க விளைவுகள் கொரோனா வைரஸைவிட
ஆபத்தானவை-
?தடுப்பூசியில் உள்ள மெசஞ்சர் ஆர்.என். ஏ.(messenger RNA) மனித மரபணுக் குறியீட்டை (genetic code) மாற்றத்துக்குள்ளாக்கும்-
?தடுப்பூசியால் இன்னும் முப்பது வருடங்களில் பெரும் புற்றுநோய் அலை உருவாகும்-
?ஊசி போட்டவர்கள் மீண்டும் தொற்றுக்குள்ளாகி வைரஸைப் பரப்புகின்றனர்-
?கோவிட் தடுப்பூசி மிகக் குறுகிய காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டு வேகமாகப்பரீட்சிக்கப்பட்டுப் பயன் பாட்டிற்கு விடப்பட்டதால் அதன் மீது சந்தேகம்-
தடுப்பூசிக்கு எதிரானவர்களிடம் மட்டு
மன்றி, ஏனையவர்களிடமும் இவை போன்ற ஐயங்களும் கேள்விகளும் உள்
ளன.சாதாரண மக்கள் ஊசி போடாமல் தவிர்ப்பதற்குக் காரணமான ஐயங்க ளுக்கு நிபுணர்களது விளக்கங்களை ஊடகங்கள் செவ்விகளாக வெளியிட்டு வருகின்றன.
மூத்த தொற்றுநோயியல் துறை நிபுணரும் ஜெனீவா பல்கலைக்கழகத்
தின் மருத்துவபீடப் பேராசிரியருமாகிய
Antoine Flahault சில ஐயங்களுக்கு விளக்
கமளித்திருக்கிறார்.
தடுப்பூசியை எதிர்க்கின்ற இயக்கத்தினர்
ஒருபோதும் தங்களை மாற்றிக்கொள்ளப்
போவதில்லை. ஆனால் பொதுமக்களில்
பெரும்பாலானோர் தங்களை நோக்கித் தாங்களே கேட்டுக்கொள்கின்ற சில நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது தார்மீகக் கடமை என்று அவர் ஒப்புக் கொள்கிறார்.
?கொரோனா தடுப்பூசி மிக விரைவாகக்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால்
அதனை நம்ப முடியாது. இது சரியா தவறா?
ஆம். மிக விரைவாக கண்டறியப்பட்டது
என்பது உண்மையே.தொற்றுநோய்க்கு
மத்தியில் தடுப்பூசியை மனிதர்களில்
சோதித்துப் பார்க்கின்ற நடவடிக்கைக
களில் நேரத்தை மிச்சம் பிடிக்க முடிந்தது.
அதாவது கிளினிக்கல் பரிசோதனை
களைச் செய்வதற்குப் பரந்த அளவில்
நோயாளிகள் கிடைக்கின்ற நிலை இருந்
ததால் அது விரைவாகச் சாத்தியமாகி யது.
ஆபத்தான எபோலா வைரஸுக்கு(Ebola virus) தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்
ளது. ஆனால் அதனை மனிதர்களில்
பரிசோதித்துப் பார்ப்பதற்கு குறைந்தது
30 ஆயிரம் தொற்றாளர்கள் அவசியம்.
அது கிடைக்காததால் தடுப்பூசி நிறைவு
பெறவில்லை. எபோலா உலகளாவிய
ஒரு தொற்று நோயாக இல்லை. மனித ரில் செய்கின்ற சோதனைகள் விரைவாக நிறைவு பெறுவதற்கு அந்த வைரஸ் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை அவசியம்.
?தடுப்பூசி ஏற்றியவர்கள் மீண்டும் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். மருத்
துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது ஊசியின் வலுவின்மையைக் காட்டு
கின்றது. சரியா, தவறா?
இதற்கு நீங்கள் இஸ்ரேல் மற்றும் இங்கி
லாந்து போன்ற நாடுகளில் தற்சமயம்
என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவதானித்தால் விளங்கும்.
டெல்ரா வைரஸ் சம்பந்தப்பட்ட புதிய
தொற்றலைகளை அந்த நாடுகள் சந்தித்
துள்ளன. ஆனால் தொற்றாளர்களது
எண்ணிக்கையையுடன் மருத்துவமனை
அனுமதிகள் மற்றும் உயிரிழப்புகளை
ஒப்பிட்டுப் பாருங்கள். முன்னர் போன்று
இல்லை. இவ்விரு நாடுகளிலும் சனத்
தொகையில் அதிகமான பங்கினர் தடுப்
பூசி ஏற்றியுள்ளனர். இதற்கு மாறாக ரஷ்யாவில் நிலைமை என்ன என்று பாரு
ங்கள். ஆக 15 வீதமானோர் மட்டுமே தடுப்
பூசி பெற்றுள்ள அங்கு டெல்ரா தொற்றி னால் ஒரு நாளில் கூட 700 பேர் மரணித்
துள்ளனர்.
தடுப்பூசி வைரஸ் தொற்றைத் தடுக்காது
விட்டாலும் நோய் நிலைமை ஆபத்தான
கட்டத்துக்குச் செல்வதையும் உயிரிழப்பு
களையும் தடுக்கிறது என்பது இதன்
மூலம் உறுதிப்படுத்தலாம்.
?மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசிகள் (Messenger RNA) மனித மரபணு மூலக்
கூறுகளை(genetic code) மாற்றி அமைக்
குமா?
மெசஞ்சர் ஆர்என்ஏ என்பது தொற்றுக்கு
காரணமான அதே கிரிமியை உடலில் செலுத்துவது தான். இன்புளுவன்சா, டெங்கு, சிக்குன்குன்யா எந்த வைரஸ்
தொற்றுக்களும் மெசஞ்சர் ஆர்என்ஏ
போன்றவை தான். வைரஸ் கிரிமியை
ஒரு நுளம்பு எப்படி உடலினுள் செலுத்து
கின்றதோ அதே போன்றது தான் மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசியின் செயற்
பாடும் ஆகும்.
மெசஞ்சர் ஆர்என்ஏ சில மணி நேரங்க ளுக்குப் பின்னர் உடற் கலங்களில் உயிர்வாழ்வதில்லை. நீங்கள் எதிர்த்துப்
போராடுகின்ற வைரஸை விட அதற்கான
தடுப்பூசி ஆபத்தானது என்று கருதுவது
எனக்கு விளங்கவில்லை.
?பைஸர் போன்ற மெசஞ்சர் ஆர்என்ஏ
தடுப்பூசிகள் (Messenger RNA) புற்றுநோயை உண்டாக்குமா?
இந்தக் கூற்றை எதிர்ப்பது கடினம். ஏனெனில் புற்றுநோயின் வெளிப்பாடு
என்பது அடுத்த சில வாரங்களிலோ
மாதங்களிலோ ஏற்பட்டுவிடுகின்ற
ஒன்றல்ல. ஆண்டுகள் பல கடந்த அது
உருவாகின்றது. அதன் பிறகே ஒரு புற்று
நோய் அலையை நாங்கள் காணமுடியும்.
இன்னும் முப்பது ஆண்டுகளில் ஒரு புற்றுநோய் அலையை உலகம் எதிர் கொள்ளும் என்று நோபல் பரிசு வென்ற ஒருவர் இப்போது கூறுவதை என்னால்
எப்படி மறுக்க முடியும்?
வாய்மூலம் சொட்டு மருந்தாகவோ வில்லைகளாகவோ தடுப்பூசிகளாகவோ
எந்த வடிவத்திலும் நாம் உள்ளெடுக்
கின்ற அனைத்து மருந்துகளுமே புற்று
நோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக்
கொண்டவைதான். மிக உச்சமாக வளி
மாசடைந்திருக்கின்ற சமயத்தில் நாம்
சுவாசிக்கின்ற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கூட புற்றுநோயை
உருவாக்கும் என்பதை நாம் அறிவோம்.
கொரோனாத் தடுப்பூசி மட்டும் தான்
புற்றுநோயை உருவாக்கும் என்று கூறு
வதற்கு விசேடமாக ஆதாரம் இல்லை.
?தடுப்பூசி ஏற்படுத்துகின்ற பக்க விளை
வுகள் வைரஸின் பாதிப்பை விட உயிரா
பத்தானவையா?
பெரியம்மை(smallpox) தடுப்பூசியுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பெரியம்மை வைரஸ் தடுப்பூசி அதைச்
செலுத்திய மில்லியன் பேரில் ஒருவரை
கொல்லும் ஆபத்தைக் கொண்டிருந்தது.
ஆனால் பெரியம்மை வருடாந்தம் இரண்டு மில்லியன் பேரைக் கொன்ற போது அதன் தடுப்பூசியை யாரும் கேள்
விக்குட்படுத்தவில்லை. பெரியம்மை
முற்றாக ஒழிக்கப்பட்டு அதன் ஆபத்து
அகன்றபின்னர் பக்க விளைவுகளைக்
கவனத்தில் கொண்டு தடுப்பூசியை
நிறுத்தினோம்.
கொரோனா தடுப்பூசியும் ஒருவரது வயது, நோய் நிலை, தேகாரோக்கியம்
என்பவற்றைப் பொறுத்து அரிதான
பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அது எல்லோருக்கும் பொதுவான ஆபத்துக்கள் அல்ல.
நாங்கள் நிலைமையைச் சமாளித்து
ஆபத்துகளைக் கண்டறிந்தால் தடுப்
பூசியை யாருக்கு சிபாரிசு செய்யலாம்
என்பதை உறுதிப்படுத்த முடியும்.
எல்லா மருந்துத் தயாரிப்புகளும் பக்க
விளைவுகள் கொண்டவையே. துரதிர்ஷ்டவசமாக பயனுள்ள அரிய
மருந்துகளிலும் எதிர்மறையாக அந்த
ஆபத்துக் காணப்படுகிறது.
?நீங்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால்
உங்கள் உடலின் காப்பு சக்தி தானாகவே வைரஸை எதிர்த்துப்போரிட்டுப் பாது காக்கும். தடுப்பூசி அவசியம் அல்ல. இது சரியா தவறா??
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தானாகவே எண்ணுவது வைரஸ் தொற்றில் இருந்து தப்பிவிட உதவாது. ஆரோக்கியமாக இருப்பவர் தீவிர சிகிச்சைக் கட்டத்தை எட்டிய பிறகு அவரது உடல் எதிர்ப்பு சக்தி மட்டுமே
அவரைப் பாதுகாத்து விடாது. நோய் எதிர்ப்புச் சக்தியை கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் அளவுக்கு ஒருவர் தன்னிச்சையாக வளர்ப்பது அரிதானது.
ஆனால் தொற்றாளர்களை நெருங்காமல் சமூக இடைவெளி பேணும் இறுக்கமான
வாழ்க்கை முறை மூலம் ஒருவர் பாதுகா
ப்புப் பெற முடியும்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.