நிலவின் இருண்ட பக்கத்தில் தெரிந்த
“குடில்” கிரக வாசிகளுடையது அல்ல!
சீனாவின் விண்கலம் உறுதிசெய்தது
நிலாவில் பூமிக்கு எப்போதும் தெரியாத இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது
என்பதைச் சீனாவின்”யூட்டு -2″ லூனர் விண்கலம் (Yutu-2 lunar rover) அங்கு
இறங்கி ஆய்வு செய்துவருகிறது.சந்தி
ரனில் தொலைவில் அதன் மர்மப்பக்கத்
தில் நடத்தப்படுகின்ற முதலாவது பரி
சோதனை முயற்சி அதுவாகும்.
கடந்த நவம்பரில்”யூட்டு – 2″ விண்கலம்
அனுப்பியிருந்த படம் ஒன்றில் நிலாவில்
மிகத் தொலைவில் சிறிய கன சதுரக் கட்டி வடிவிலான ஆர்வத்துக்குரிய பொருள் ஒன்று காணப்பட்டது. அந்த மர்ம உருவம் என்னவாக இருக்கக் கூடும் என்று பல விதமான ஊகங்கள் விண்
வெளி அறிவியல் வட்டாரங்களில் நிலவி
யது. அது ஒரு சிறிய குடில் போன்று தோன்றியதால் சீன அறிவியலாளர்கள் அதனை”சந்திரக் குடிசை” (Moon Hut) என்று அழைத்தனர்.வேற்றுக் கிரக
உயிரினங்கள் பற்றிய புனைகதைகளை நம்புவோர் அதனை “மர்மக்குடிசை”
(“mysterious hut”) என்றும்”வேற்றுக் கிரக
வாசிகளது குடில்” (Alien Hut’) எனவும் கற்பனை செய்தனர்.
இது தொடர்பான பல செய்திகள் கடந்த
நவம்பர் மாதம் முதல் விண்வெளி அறி
வியல் துறைச் செய்தியாளர்களால் வெளியிடப்பட்டு வந்தன. மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்காக சீன விஞ்ஞானிகள் “யூட்டு”விண்கலத்தை அந்த இடத்துக்கு நெருக்கமாக அனுப்பி மேலும் தெளி
வான படங்களைத் தற்சமயம் பெற்றுக்
கொண்டுள்ளனர். உலக கவனத்தை
ஈர்த்த அந்த மர்ம உருவம் ஒரு தனித்த கற்பாறை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. முயல் ஒன்றின் சாயலில்
அது தென்படுவதால் சீன அறிவியலாளர்
கள் அதற்கு “jade rabbit”எனப் பெயரிட்டுள்
ளனர்.
நிலாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்
கின்ற யூட்டு – 2 கலம் கடந்த 2019 இல்
சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்
தினால்(China National Space Administration)
அங்கு தரையிறக்கப்பட்டிருந்தது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.