கண்ணிவெடிகளைக் கண்டறிந்து
சாதனை புரிந்து பதக்கம் வென்ற
“மஹவா”உயிரிழந்ததாக அறிவிப்பு
தன் வாழ்வின் பெரும் பகுதியை வெடிப்
பொருள்களை முகர்ந்து பிடிப்பதில் பங்
களித்து உலக அளவில் அறியப்பட்ட
“மஹவா”(Magawa) என்ற ஆபிரிக்க எலி முதுமை காரணமாக உயிரிழந்தது.
எலியைப் பயிற்றுவித்துப் பராமரித்து
வந்த பெல்ஜியம் நாட்டின் தன்னார்வத்
தொண்டு நிறுவனமாகிய APOPO அதன்
மறைவுச் செய்தியை வெளியிட்டிருக்கி
றது.
கண்ணி வயல்கள் நிறைந்த கம்போடியா
நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் ஆபத்தான பொறி
வெடிகளை மஹவா முகர்ந்து அறிந்து
மீட்க உதவியுள்ளது. பல நூறு பேரின்
உயிர்கள் மற்றும் அவயவங்கள் இழப்பு
அதனால் தடுக்கப்பட்டிருக்கிறது என்று
APOPO நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2013 இல் தன்சானியாவில்
பிறந்த மஹவா, விசேட பயிற்சிகளுக்
குப் பிறகு 2016 முதல் கம்போடியாவில்
அதன் பணியைத் தொடங்கியது. முது
மை காரணமாகத் தனது ஏழாவது வய
தில் கடந்த ஆண்டு அதற்கு ஓய்வு வழங்
கப்பட்டிருந்தது.
ஒரு ரெனிஸ் விளையாட்டுத் திடல்
அளவுள்ள நிலப்பரப்பில் சாதாரணமாக மனிதர்கள் சாதனங்களுடன் நான்கு நாட்களில் தேடிப்பிடிக்கக் கூடிய கண்ணி வெடிகளை மஹவா எலி சுமார் இருபது
நிமிடங்களில் முகர்ந்து பிடித்துவிடும் திறமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
வெடிப்பொருளை முகர்ந்து அறிந்தவுடன்
அது அந்த இடத்தில் தரை மீது சுரண்டி
பயிற்றுவிப்பாளருக்குத் தெரியப்படுத்
தும். ஆபத்தான பணியில் அது புரிந்த
சாதனைகள் உலக அளவில் ஊடகங்
களில் இடம்பிடித்தன.
மஹவா புரிந்த அர்ப்பணிப்பு மிகுந்த
சேவைக்காக கடந்த ஆண்டு தங்கப்பதக்
கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமாகிய “நோயுற்ற விலங்குகளுக்கான மக்கள்
மருந்தகம்”(People’s Dispensary for Sick Animal) அந்தப் பதக்கத்தை வழங்கி
யது. ஜோர்ஜ் சிலுவை(George Cross)
என அழைக்கப்படும் அந்த அமைப்பின்
தங்கப் பதக்கத்தைப் பெற்ற ஒரேயொரு
கொறித்துண்ணி விலங்கு மஹவாவே
ஆகும்.
ஹலோரஸ்ட் கண்ணி வெடியகற்றும்
நிறுவனத்தின் தகவலின்படி கம்போ
டியாவில் 64 ஆயிரம் பேருக்கு மேற்பட்
டோர் கண்ணிகளில் உயிரிழந்துள்ள
னர். பல தசாப்தங்கள் நீடித்த உள் நாட்டு
யுத்தம் மற்றும் வியட்நாம் போர்க் காலத்
தில் நாட்டின் பெரும் பகுதிகள் கண்ணி
கள் மற்றும் வெடிப்பொருள்கள் விதைக்
கப்பட்ட நிலமாக மாறியது.
குமாரதாஸன். பாரிஸ்.