பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள்
உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!!
வெளியேறும் மக்களால்
?உக்ரைன் தலைநகரில்
பெரும் வாகன நெரிசல்!
அதிபர் மக்ரோன் இன்று
நாட்டுக்கு விசேட உரை!
?உலக பங்குச் சந்தைகள் சரிவு
எண்ணெய், எரிவாயு விலைகள்
என்றுமில்லாதவாறு எகிறின!!!
நேட்டோவின் பதில் நடவடிக்கை
நாளைய கூட்டத்துக்குப் பின்பே!
உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு
களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக
வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந்
துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன.
தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக்
குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை
நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின்
எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன
என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
பெலாரஸ் நாட்டில் இருந்து நுழைந்த
ரஷ்யப் படை அணி ஒன்று கிராட் ஏவுக
ணைத் (Grad missiles) தாக்குதல்களை
நடத்தியவாறு முன்னேறி கீவ் பிராந்தியத்
தின் விளிம்பில் உள்ள ஹொஸ்டோமெல் விமானத் தளத்தை (Hostomel Airport) நெருங்கியுள்ளது. அந்தப்பகுதியில் கடும்சண்டை மூண்டுள்ளதாகவும் அடை
யாளம் தெரியாத ஹெலிக்கொப்ரர்கள்
சில வான்பரப்பில் தென்படுவதாகவும்
ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ஹொஸ்டோமெல் விமான நிலையம்
(Hostomel Airport) உலகின் மிகப் பெரிய
வர்த்தக வான் தளம் ஆகும். அதேசமயம் உலகின் மிகப் பெரிய’மிரியா’ (Mriya)
எனப்படும் சரக்கு விமானத்தின் இறங்கு
தளமாகவும் உக்ரைன் இராணுவத்தின் பிரதான வான் தளமாகவும் விளங்குகின்
றது என்பது கவனிக்கத்தக்கது. அந்தத்
தளம் ரஷ்யப் படைகள் வசம் வீழ்ந்தால்
அது உக்ரைனுக்குப் பெரும் இராணுவப் பின்னடைவாகவும் கீவ் நகருக்கு அச்சுறு
த்தலாகவும் மாறும்.
இதேவேளை, இதுவரையான தாக்குதல்
களில் ஜம்பதுக்கு மேற்பட்ட சிவிலியன்
கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன்
அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யக் ஹெலிக்கொ
ப்ர்ர் ஒன்றின் வீடியோ காட்சி சமூகவலை
தளங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்யா
வின் ஆறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி
யிருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரி
வித்துள்ளது.
இதேவேளை, இன்று காலை முதல்
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து பெரும் மக்கள் இடம்பெயர்வு ஆரம்பித்து
ள்ளது. வெளியேறிச் செல்வோரது வாகன அணிகளால் பிரதான தெருக்
களில் மிகப் பெரும் நெரிசல் நிலைமை
காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்
கின்றன.
எங்கே செல்வது என்ற முடிவு தெரியாம
லேயே பலரும் தலைநகரை விட்டுத் தற்
காலிகமாக வெளியேறிச்செல்கின்றனர்.
அவர்களில் பெரும் எண்ணிக்கையான
வர்கள் மேற்கே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கியே படையெடுத்து
வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
நகரில் உள்ள செய்தியாளர்களது தகவல்
களின் படி, வான் தாக்குதல்களை எதிர்
பார்த்து நகரவாசிகள் நிலத்தடி ரயில்
நிலையங்களில் பதுங்கியுள்ளனர் என்று
சொல்லப்படுகிறது. தொடர்ந்தும் நகரில்
சைரன் சத்தங்களைக் கேட்க முடிகிறது.
நகரின் மையப்பகுதிகள் ஆள் அரவம்
இன்றி வெறிச்சோடியுள்ளன.
ரஷ்யாவின் தாக்குதல்களை அடுத்து
உலகெங்கும் முக்கிய பொருளாதார சக்
திகளான நாடுகளில் பங்குச் சந்தைகள்
பெரும் சரிவைக் காட்டியுள்ளன. எரிவாயு,
மசகு எண்ணெய் விலைகள் என்றும் இல்
லாதவாறு உச்ச அளவை எட்டியுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள்
விதித்த தடைகள் போதுமானவையாக
இல்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தி
யில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள்
வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடுகின்
றனர். கூட்டாக எடுக்க வேண்டிய அடுத்த
கட்ட நடவடிக்கைகளை அங்கு அவர்கள்
தீர்மானிப்பர் என்று தெரிவிக்கப்படுகி
றது.
பிரான்ஸின் தேசிய பாதுகாப்புச் சபை
இன்று காலை அவசரமாகக் கூடியது.
போர் நிலைவரம் தொடர்பாக அதிபர்
மக்ரோன் அமைச்சர்கள் மற்றும் அதிகா
ரிகளோடு கலந்தாலோசனைகளை நடத்
தினார். அதன்பிறகு நண்பகலில் அவர்
நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையின் விவரங்கள் மற்றும் பிந்திய செய்திகள் அடுத்த பதிவில்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்