நீண்ட தூர ஏவுகணைகளை
உக்ரைனுக்கு வழங்கினால்
புதிய இலக்குகளைத் தாக்குவோம்!
மேற்குலகிற்குப் புடின் எச்சரிக்கை
மேற்கு நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்குகின்ற ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் ரஷ்யா புதிய இலக்குகள் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்.
அரசுத் தொலைக்காட்சிக்கு வழங்கிய
செவ்வியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். போர் ஆரம்பித்த பிறகு அவர் இவ்வாறு நேரடியான அச்சுறுத்தலை விடுப்பது இதுவே முதல் முறை ஆகும். கடந்த சில வாரகால இடைவெளிக்குப் பின்னர் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஞாயிறு காலை ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.அந்தத் தாக்குதல் நடந்து சில மணி நேரத்துக்குப் பின்னரே புடினின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
“மேற்குலகின் அளவுக்கு அதிகமான
ஆயுத விநியோகங்கள் என்னைப் பொறுத்தவரை இந்த ஆயுத மோதல்
இன்னும் நீண்டுசெல்வதற்கே உதவப்
போகின்றன. நீண்ட தூர ஏவுகணைகள்
வழங்கப்பட்டால் அதற்குப் பொருத்தமான முடிவுகளை நாங்கள்
எடுப்போம். எங்களிடம் தாராளமாக உள்ள அவை போன்ற ஆயுதங்களைப்
பயன்படுத்துவோம். இதுவரை தாக்காத
இலக்குகளைத் தாக்குவோம் “-என்று
புடின் அந்தச் செவ்வியில் தெரிவித்துள்
ளார்.
” ஹிமார்ஸ்”என்கின்ற எம் 142 நடுத்தரத்
தொலைவு ஆட்டிலறி ஏவுகணைத் தொகுதிகளை(M142 High Mobility Artillery Rocket System – Himars) உக்ரைனுக்கு
வழங்குவதாக சில தினங்களுக்கு முன்பு
அமெரிக்கா அறிவித்திருந்தது. உக்ரை
னுக்கு இதுவரை மேற்கு நாடுகள் அள்ளி வழங்கிய ஆட்டிலறிப் பீரங்கிகளிலேயே
அதிக தூரம் சென்று தாக்கவல்ல ஏவாயு
தம் இதுவாகும். கிழக்கு டொன்பாஸ்
பிராந்தியத்தில் ரஷ்யாவின் முன்னேற்
றத்தைத் தடுக்க வேண்டுமானால் இத்
தகைய தொலைதூர ஏவுகணைகள் அவசியமாகும் என்பதை உக்ரைன் அரசு
தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுவந்தது.
அதனை ஏற்றுக் கொண்டு அமெரிக்கா தற்சமயம் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முன் நிபந்தனையுடன் இந்த நவீன ஆட்டிலறி ரொக்கெட்டுகளை
உக்ரைனுக்கு வழங்குகிறது.
உக்ரைன் படைகளால் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஆட்டிலறி ஏவுகணைகளை விட அதிகமாக 70 கிலோ மீற்றர்கள் (45மைல்கள்) தொலை
வில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கக் கூடிய – வழிகாட்டல்களின் கீழ் இயங்கவல்ல –
ஏவுகணைகளைக் கொண்டது ஹிமார்ஸ்
ஆட்டிலறித் தொகுதி.
டொன்பாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்று
வருகின்ற தீவிர யுத்தத்தில் இந்தப்
பீரங்கிகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
(படம் :ஹிமார்ஸ் என்கின்ற எம் 142 நடுத்தரத் தொலைவு ஆட்டிலறி ஏவுகணைத் தொகுதி)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.