1971 ஆம் ஆண்டு வெளிவந்து இசை ரசிகர்களின் மனதை இன்றளவும் ஈர்த்து வைத்துள்ள பாடல்

1971 ஆம் ஆண்டு வெளிவந்து இசை ரசிகர்களின் மனதை இன்றளவும் ஈர்த்து வைத்துள்ள பாடல் தான் 2024 பரீஸ் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் பிரான்ஸின் Sofiane Parmat இன் பியானோ இசையோடு இணைந்து பிரான்ஸின் பிரபல பாடகி Juliette Armani பாடிய Imagine பாடல் .
1960 களில் உலகை கட்டிப்போட்டு வைத்திருந்த Beatles இசைக்குழுவின் உருவாக்குனர்களில் ஒருவரான John Lennon அவரது மனைவி Yoko Ono உடன் இணைந்து உருவாக்கிய இசைத் தொகுப்பு ஒன்றில் இடம்பெற்ற ஒரு பாடலே Imagine. Major C யில் Soft Pop Rock இசைப் பின்னணியில் இப்பாடல் அமைந்திருந்தது.
பொருள் முதல்வாதம் இன்றி எல்லைகளற்ற,மதங்களற்ற உலகை நோக்கி பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் அனைத்து பின்னணியிலுள்ளவர்களும் ஒன்றெனும் வண்ணம் இரக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் மனிதகுலம் ஒன்றிணையும் அவாவை வெளிப்படுத்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில், அட்லாண்டா ஒலிம்பிக் பூங்காவில் 1996 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின் அதன் இறுதி நாள் நிகழ்வில் முதன் முதலாக Imagine பாடல் பாடப்பட்டது..அதைத் தொடர்ந்து பரிஸ் ஒலிம்பிக் வரை தொடர்ச்சியாக கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக்கில் இப்பாடல் ஒலித்து வருகிறது..
பிரான்ஸின் batacalan தாக்குதல் ,கொரானா , உட்பட ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வலியுறுத்த வேண்டிய நிலைமைகளிலும் உலகெங்கும் இப்பாடல் புது வேகம் எடுக்கிறது..

நன்றி குமாரதாஸன் வாசுகி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net