அம்பலமானது ஆதாரம்! பெரும் சிக்கலில் மஹிந்த!

அம்பலமானது ஆதாரம்! பெரும் சிக்கலில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மஹிந்த தொடர்பிலான சிக்கல் நிலை குறித்து கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறு சபாநாயகர், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கான நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்த பின்னர் கடந்த 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டதாக மஹிந்த தனது டுவிட்டர் பத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அதற்கமைய அவர் அந்த கட்சியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸிடம் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். ஆரம்ப உறுப்பினராகவே அவர் உறுப்புரிமை பெற்றுக் கொண்டார் என்பதற்கு பல டுவிட்டர் பதிவுகள் ஆதராமாக கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்று கொண்டதன் பின்னர் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் அதில் உறுப்பினராக இணைந்து கொண்டார்.

அதனை உறுதி செய்வதற்கு நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவது உறுதியானால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net