பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!

பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!

பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மைக்கல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்ததையடுத்து அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ளார்.

தனது இராஜினாமா குறித்து பெல்ஜியம் மன்னருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது மன்னரினால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பெல்ஜியம் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு முன்கூட்டிய தேர்தலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 0248 Mukadu · All rights reserved · designed by Speed IT net