ஐந்தாவது தங்கப் பாதணி விருதை வென்று மெஸ்ஸி சாதனை!

ஐந்தாவது தங்கப் பாதணி விருதை வென்று மெஸ்ஸி சாதனை!

கால்பந்து உலகில் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, ஆண்டின் தங்கப் பாதணி விருதை வென்றுள்ளார்.

2017-2018 ஆண்டு பருவக்காலத்தில் நடைபெற்ற ஐரோப்பா லீக் போட்டிகளில், அதிக கோல்கள் அடித்தமைக்காக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இது அவரது ஐந்தாவது தங்கப் பாதணி விருதாகும். இதன்மூலம் அதிக தங்கப் பாதணி விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ள லியோனல் மெஸ்ஸி, நான்கு முறை இந்த விருதைப் பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தியிருக்கிறார்.

இவர் கடந்த தொடரில் நடைபெற்ற ஸ்பெயின் லீக் தொடரான லா லீகா தொடரில், மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காகக் 36 போட்டிகளில் 34 கோல்கள் அடித்துள்ளார். இவருக்குப் போட்டியாக கருதப்படும் ரொனால்டோ 26 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இந்த விருதைப் பெற்றபின் மெஸ்ஸி கூறிய கருத்துக்கள் இவை, ‘உண்மை என்னவென்றால் நான் தொடங்கும்போது இதெல்லாம் நடக்கும் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது.

முக்கிய கால்பந்து தொடர்களில் விளையாட வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். எனக்குக் கால்பந்து மிகவும் பிடிக்கும்.

ஆனால், இவ்வளவு எனக்குக் கிடைக்கும் என்று நான் கற்பனை செய்ததுகூட இல்லை
உலகின் மிகச்சிறந்த அணியான பார்சிலோனாவில் விளையாடுவது தனது பணியை மேலும் எளிதாக்கியுள்ளது’ என கூறினார்.

தற்போது நடைபெற்றுவரும் கால்பந்து தொடரிலும், 14 கோல்களுடன் தனது ஆறாவது தங்கப் பாதணி விருதை குறிவைத்திருக்கிறார் மெஸ்ஸி.

அண்மையில், லா லிகா கால்பந்து தொடரின், 2017-2018ஆம் ஆண்டு பருவகாலத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற விருதும், இத்தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் மெஸ்ஸி பெற்றிருந்தார். என்பது நினைவுக் கூரத்தக்கது.

உலகம் மெச்சும் அளவிற்கு மெஸ்ஸிடம் திறமைகள் நிறைந்திருந்தாலும், நடப்பு வருடம் அவருக்கு சிறப்பான வருடமாக அமையவில்லை.

பலரும் எதிர்பார்த்திருந்த உலகக்கிண்ணம், பிபாவின் சிறந்த வீரர் விருது என பலதும் அவருக்கு இந்த ஆண்டு எட்டாக் கனியாக மாறிவிட்டமை வருத்தமான விடயமே என்ற போதிலும், குறித்த இரு விருதுகள் அவரை சற்று திருப்தியடைய வைத்துள்ளது.

Copyright © 0568 Mukadu · All rights reserved · designed by Speed IT net