மூன்றாவது வார முடிவில் 1000 கோடியை நெருங்கும் ‘2.O’ !

மூன்றாவது வார முடிவில் 1000 கோடியை நெருங்கும் ‘2.O’ திரைப்படம்!

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் ‘2.O’. உலக அளவில் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் 1000 கோடி ரூபாவை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் 10000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘2.O’ திரைப்படம் முதல் நான்கு நாட்களிலேயே 400 கோடி ரூபாய் வசூலித்தது.

மேலும், சில நாட்களிலேயே திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது.

‘2.O’ திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 398 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் ‘2.O’ திரைகப்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றது.

சென்னை மாநகரில் மட்டும் 3ஆவது வாரமாக சுமார் 80 திரைகளில் ‘2.O’ ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் 30 கோடி ரூபாவை தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை இந்தசாதனை மிகப்பெரிய வசூல் சாதனையாகும்.

இதற்கு முன்னர் கபாலி 3ஆவது வாரத்தில் சென்னையில் வசூல் சதானையாக 18 கோடி ரூபாய் வசூலித்தது.

உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் 461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து 285 கோடியையும் வசூலித்துள்ளது.

தற்போது ‘2.O’ திரைப்படத்தின் மொத்த வசூல் 750 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுமார் 1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சாதனை இந்திய சினிமாவின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படும்.

‘2.O’ திரைப்படம் நேற்று வரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முக்கியமாக 3டி வசதி கொண்ட திரையரங்குகளில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகின்றது.

2டி பதிப்பை விட 3டி வசதியில் திரைப்படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

மேலும், இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வருகின்றன.

‘2.O’ திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஜினி திரைப்படங்கள் எப்போதுமே வசூலில் முதல் சாதனைகள் நிறைய நிகழ்த்தும் என்பதால், ‘2.O’ திரைப்படமும் வசூலில் சாதனை நிகழ்த்துகின்றது.

சுமார் 600 கோடி ரூபாவில் தயாரான இத்திரைப்படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.

மேலும், சில பாடசாலைகளிலும் இத்திரைப்டம் நல்ல கருத்தை கூறியிருக்கின்றது. இதனால், குழந்தைகளை திரைப்படத்திற்கு கூட்டி செல்கின்றனர். இப்படி குழந்தைகளின் ஆதரவையும் பெற்ற இத்திரைப்படம் புது வருடத்தில் சீனாவிலும் வெளியாக இருக்கின்றது.

பிரம்மாண்ட படைப்பில் உருவான ‘2.O’ திரைப்படம், உலகம் முழுவதும் இதுவரை 705 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5861 Mukadu · All rights reserved · designed by Speed IT net