முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும்இ நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.
அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும்இ காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும்இ நெஞ்சம் கனக்கும்இ தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும். இத்தனை தகுதிகளும் அந்த முள்ளிகாய்க்காலுக்கு எப்படி வந்தது?
நஞ்சுமாலைகள் களத்திலே வீழ்ந்த்தாம்இ அஞ்சிடாதார் உடல்கள் அழிந்து போனதாம்இ குஞ்சு குருமன்களும் குண்டுபட்டுச் சிதைந்து போனதாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பின் போர்க்களத்தில் தமிழினம் ஆடிய வெஞ்சமரது. அந்த முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் கொடுமையை அப்பெருந்துன்பத்தை எப்படிச் சுமப்போம்.
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர். நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனியஇ கொசோவாஇ அல்பேனியாஇ சூடான்இ எரித்திரியாஇ கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.
உலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா? மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே!! உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்துக் கிழட்டு நரி போர்நிறுத்தம் வந்துவிட்டது என்று உலகத்தமிழர்களை சமாதானப்படுத்த உண்ணாவிரத நாடகம் வேறு ஆடினார். அப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள்இ குண்டுபட்டு மடிந்தார்கள்இ படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். மகிந்தவின் இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லைஇ பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து? கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா? மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.
காருணிய வள்ளல் புத்தனின் சீடன் மகிந்ததேர் ஈழம் வந்தான் அறத்தைப்போதிக்க. ஆனால் அவன் வழிவந்த பூட்டப்பிள்ளை மகிந்த ராஜபக்ச ஈழம் வந்தான் கொலைத்தொழில் கற்பிக்க. இருவரிலும் ஒரு ஒற்றுமை கண்டோம் இருவரது பயணமும் பௌத்த்த்தின் பெயரால் நிகழ்ந்த்தாம். ஈழமண் பல பௌத்த வெறியர்களை கண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பௌத்தமத வெறியனாக தன்னை இனங்காட்டி நவீன துட்டகைமுனு என்று தன்பெயரையும் பொறித்துக்கொண்டு இருக்கிறான் இந்த மனிதகுலத்திற்கெதிரான மிகப்பெரும் குற்றவாளி.
முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.
நாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா?
தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும்இ சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.
எல்லாவற்றிற்கும் மேலாக வைகாசித்திங்கள் 16இ 17ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா? அந்தக் கொலைகாரக் ஹிட்லர் கூட கொன்றதன் பின்தான் யூதர்களைப் புதைத்தான்இ எரித்தான். ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்களமோ உயிருடனல்லவா எம்மினத்தைப் புதைத்த்து.
ஒன்றா இரண்டா இரண்டு நாளில் 40இ000 ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.
உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீர்ர்களையும்இ பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம்.
உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்த்தான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா? சிங்களதேசற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா உலகத்தமிழினமே விழித்திருஇ வெறித்திருஇ தெளிந்திருஇ நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.
நன்றி உலக தமிழ்