கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பாரிய மோசடி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாக தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் உள்ள தனியார் கொட்டல் ஒன்றில் குறித்த ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான அகிலன் மேற்கண்டவாறு பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

அவர் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 50 கோடிக்கு மேல் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் பண்ணைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிடமும் இருந்து வருமான பணம் என தெரிவித்து 3000 பணம் தொடர்ச்சியாக பெறப்பட்டு வருவதாகவும், அவற்றில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான முழு ஆதாரமும் தம்மிடம் உள்ளதாக தெரிவிக்கும் அவர், இவ்விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பதாலேயே ஊடகங்களின் ஊடாக தாம் வெளிப்படுத்த முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பண்ணைகளில் பணிபுரியும் நபர்களிடமிருந்து 3000 பணம் பெறப்படுவதாகவும், அதற்கு முறையாக பற்று சீட்டுகள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கும் அவர், குறிப்பிட்ட தொகை பணம் வரவாக காட்டப்படாது அவ்வந்த பண்ணைகளில் காட்சிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு கொள்ளையிடப்படும் பணம் தனிநபர் பொக்கட்டுகளிற்கு செல்வதாகவும் தெரிவிக்கும் அவர் இவ்விடயம் தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் நேரடியாக கண்காணித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு பணிபுரிபவர்கள் அங்கவீனர்களாகவும், முன்னால் போராளிகளாகவும் உள்ள நிலையில் இவ்வாறான மோசடி இடம்பெற்று வருவதாகவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.

மலையக மக்கள் 1000 ரூபா ஊதியம் கோரி போராட்டம் நடார்த்திவரும் நிலையில், இங்கு சிலரது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு 1000 ரூபா செலவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு பலர் சுகபுாக வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும் அவர் இதன்புாது குற்றம் சாட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net