மக்கள் நலன் சார்ந்து பணியாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா. அழைப்பு!

மக்கள் நலன் சார்ந்து பணியாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா. அழைப்பு!

நிலவும் அரசியல் வேறுபாடுகளை கலைந்து, ஜனநாயகம் மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதியான மற்றும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளமையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு செயலாளர் நாயகம் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

ஜனாதிபதியின் இச்செயற்பாடு நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் சுமார் இரண்டு மாதங்களாக நிலவிய அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net