யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் கொண்டுசென்ற ஒருவர் கைது!

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் கொண்டுசென்ற ஒருவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு செல்லப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன.

போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வரக்காபொல பகுதியைச் சேர்ந்த நபர்கள் என்றும் அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் இனிப்பு பண்டங்களை இரச இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net