Sri Lanka First என்ற பெயரில் வேலைத்திட்டம்

Sri Lanka First என்ற பெயரில் வேலைத்திட்டம்

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் கனிந்திருப்பதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் உரையாற்றினார். 2018ஆம் ஆண்டுக்குரிய தேசிய கட்டுமான விருது விழா நேற்று மாலை இடம்பெற்றது.

கட்டுமானத்துறை சார்ந்தும் Sri Lanka First என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்து துறை சார்ந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

துறைசார் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண்பதும் அவசியம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய இடையீடுகள் பற்றியும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ விபரித்தார்.

Copyright © 2359 Mukadu · All rights reserved · designed by Speed IT net