தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் மோடி!
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி சென்னை, வேலூர் அல்லது கோவை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்த பரீசீலனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் மோடியின் தமிழக வருகை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு பா.ஜ.க திட்டமிட்டு வருவதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.