வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்!
அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அந்தப் பகுதி மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசிய குழப்ப நிலையால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு சென்று பதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு முதல் அதிகளவான நிதிகளை வெளிநாடுகளிலிருந்து கடன்களாகப் பெற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இந்நிலைக்கு காரணமாகும்“ என தெரிவித்துள்ளார்.