மோடியை விமர்சிக்கும் ஸ்டாலின் ஒரு ‘சேடஸ்ட் ஸ்டாலின்’!

மோடியை விமர்சிக்கும் ஸ்டாலின் ஒரு ‘சேடஸ்ட் ஸ்டாலின்’!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘சேடிஸ்ட் மோடி’ என விமர்சித்தமைக்கு பா.ஜ.க எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

மோடியை ‘சேடிஸ்ட்’ என விமர்சிக்கும், ஸ்டாலின் ஒரு ‘சேடஸ்ட்’ என்று, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,

தமிழ்நாட்டு மக்களவைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், அவரை நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பாஜக மோடியை அல்ல பிரதமராக இருக்கக்கூடிய மோடியை தான் ‘சேடிஸ்ட் தான்’, ‘சேடிஸ்ட் தான்’, ‘சேடிஸ்ட் தான்’ என நான் ஒரு முறை அல்ல பலமுறை கூறுவேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகிகளோடு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசிய நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“தமிழகத்தில் இனிமேல் தான் பா.ஜ.க விஸ்வரூபம் எடுக்கப் போவதாக தெரிவித்தார். ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குவதாகவும் தமிழிசை விமர்சித்தார்.

மேலும், தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகம் குறித்து என்னிடம் பிரதமர் அடிக்கடி விசாரித்துள்ளார். மோடி போன்ற நல்லவர் மீண்டும் பிரதமராக வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை ‘சேடிஸ்ட்’ என விமர்சிக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் ‘சேடஸ்ட் ஸ்டாலின்’ என அழைக்கப்படுவார்.

ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குவதாக விமர்சித்த தமிழிசை, தமிழகத்தில் இனிதான் பா.ஜ.க விஸ்வரூபம் எடுக்கவுள்ளது” எனக் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net