கணினி குற்றங்களை தடுக்க புதிய இணையத்தளம்!

கணினி குற்றங்களை தடுக்க புதிய இணையத்தளம்!

பிரதமர் நரேந்திர மோடி, கணினி குற்றங்களைத் தடுப்பது குறித்த புதிய இணையத்தளத்தினை ஆரம்பித்துவைத்தார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இம்மாநாட்டில் கணினி மூலமாக மேற்கொள்ளப்படும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களை (சைபர் கிரைம்) தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கணினி குற்றங்களைத் தடுப்பது குறித்த புதிய இணையத்தளத்தை ஆரம்பித்துவைத்தார்.

அதில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த பிரதமர்,

“இந்த இணையத்தளம் மூலமாக அனைத்து கணினிகள் மூலம் நடத்தப்படும் குற்றங்களை அறிந்துகொள்ள முடியும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பொலிஸார் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பமான இணையத்தளம், செயலிகள் (ஆப்) மூலமாக பொலிஸ் பற்றிய தகவல்களையும், குற்றச்செயல்களை தடுப்பது குறித்தும் அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net