இந்தியாவின் நீளமான போகிபீல் பாலம் – பிரதமர் நாளை திறப்பு!

இந்தியாவின் நீளமான போகிபீல் பாலம் – பிரதமர் நாளை திறப்பு!

இந்தியாவின் அசாமில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான ரயில் மற்றும் வீதிப் பாலத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கின்றார்.

அசாம் மாநிலம் திப்ரூகர் நகரின் அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, 4.94 கிலோ மீற்றர் நீளத்துக்கு போகிபீல் பாலம் (Bogibeel) கட்டப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இப்பாலத்தை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான நாளை 25 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில், 16 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவுற்ற நிலையில், கடந்த 3 ஆம் திகதி ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

2 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலத்தின் கீழடுக்கில் இருவழி ரயில்பாதையும், மேலடுக்கில் 3 வழிவீதிகளும் அமைந்துள்ளன.

இந்த திட்டத்திற்கு கடந்த 1997ஆம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டாலும், 2002ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதேவேளை,2007ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதனை தேசிய உள்கட்டமைப்புத் திட்டமாக அறிவித்தது.

இப்பாலம் ஆசியாவின் 2ஆவது மிகப்பெரிய பாலமாகம்.

மேலும், குறித்த மூலம் 100 கி.மீ தூரம் குறைந்த பயணத்தை மேற்கொள்ளமுடியும். இதன்மூலம் இந்தியாவும், சீனாவும் 4000 கி.மீ நீள எல்லையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7618 Mukadu · All rights reserved · designed by Speed IT net