2018 பிரான்ஸில் அதிகளவு வெப்ப நிலையை கொண்ட வருடமாக பதிவு
இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகளவு வெப்ப நிலையை கொண்ட வருடமாக 2018 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.
வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்டு வரும் காலத்தில் இருந்தே, இவ்வருடம் பிரான்ஸ் பிரதான நிலத்திலும் Corsica தீவிலும் மிக அதிகளவான வெப்பத்தை இவ்வருடம் கண்டிருந்தது.
அந்தவகையில் 1.5°C வெப்பம் கூடுதலாக இவ்வருடம் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. சராசரி வெப்பமாக 14°C உள்ளது. முன்னதாக 12.5 அல்லது 13°C வெப்பத்துக்குள்ளாக மட்டுமே சராசரி இருந்துள்ளது.
அதேவேளை, முன்னதாக அதிக வெப்ப நாட்களை கொண்ட வருடம் எனும் சாதனையும் இவ்வருடத்தில் பதிவாகியிருந்தது.
அத்தோடு சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, ஒஸ்ரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சராசரி வெப்பத்தில் இருந்து அதிகளவான வெப்பத்தை இவ்வருடத்தில் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.