வெள்ளை மாளிகையில் தனிமையில் இருக்கிறேன்!
அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில் பாதுகாப்பு கருதி சுவர் எழுப்ப வேண்டும் எனவும், அதற்காக 500 கோடி டொலர் நிதி ஒதுக்க வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு அமெரிக்க எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி மறுத்து விட்டது. மேலும் அமெரிக்க அரசின் செலவின நிதி மசோதாவை செனட்டில் நிறைவேற்ற எதிர்க்கட்சி முன்வரவில்லை.
இதனால் தொடர்ந்து 3 வது நாளாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. அத்தோடு அரசாங்க ஊழியர்கள் ஊதியம் இன்றி பணியாற்ற வேண்டிய நிலை ஏற்ப்பட்டு உள்ளது.
அத்தோடு இன்று கிறிஸ்மஸ் பண்டிகை, அதைக்கூட கொண்டாட செல்லாமல், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தங்கி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“வெள்ளை மாளிகையில் நான் தனியாக இருக்கிறேன். அமெரிக்க ஷட்டவுனை முடிவுக்குக் கொண்டுவரவும், அவசரமாக தேவைப்படும் எல்லை பாதுகாப்புக்கு ஒரு ஒப்பந்தம் செய்யவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் திரும்பி வந்து அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் அதற்காக காத்திருக்கிறேன்.
ஆனால் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் நாட்டை பற்றி கவலைப்படாமல் கிறிஸ்மஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் நாட்டைப் பற்றி பேசுகிறார்கள்.
வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நான் வெள்ளை மாளிகையில் ஒரு ஏழை போல உணர்வுடன் தனியாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.