கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜேவிபியினர் சந்தித்தனர்.
இன்று கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், மு.பா ம உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்த அவர்கள், அங்குள்ள மக்களின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது தாம் பட்ட இன்னல்கள் தொடர்பில் அவர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.