கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது !
கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7 இளைஞர்களை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7 இளைஞர்களை கடந்த செவ்வாய்க்கிழமை ஹட்டன் பொலிஸார் கைது செய்ததாக தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை கடந்த செவ்வாய்க்கிழை காலை 11.00 மணிமுதல் இரவு வரை வாகனங்களை சோதனை செய்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலைக்கு போதைப் பொருட்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.