தெற்கின் ஆயுத குழுக்களுக்கு வடக்கிலிருந்து ஆயுதங்கள்?
கடந்த எட்டு மாதங்களில் இலங்கையில் 320 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த கொலைகளில் 200 சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டவை என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆயுத முனையில் 252 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 335 ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் இதில் ரி56 ரக துப்பாக்கிகளே அதிகளவில் உள்ளடங்குகின்றன.
இராணுவத்திலிருந்து தப்பி சென்றவர்கள் மற்றும் வடக்கின் பல்வேறு தரப்பினரும், தெற்கின் ஆயுத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரின் 65 முகாம்களின் உதவி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.