வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்பட்டன.
இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து ஒரு தொகுதி உதவிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளித்தனர்.
இதேவேளை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை நேரடியாக செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






இதேபோன்று முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.