எச்சரிக்கை – மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள்!
தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்தசேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாரஹென்பிற்றியில் அமைந்துள்ள குருதி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் உரையாற்றினார்.
கடந்த காலப்பகுதியில் 49 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.