9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு இந்து புரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகழயுள்ளது.

நேற்று வியாளக்கிழமை குறித்த பிரதேசத்தில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்காக குளோரின் இடப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக இரு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறித்த இரு ஊழியர்களும் வீடுகளிற்கு சென்றுள்ளனர். பெற்றோர் வேலையின் நிமித்தம் வீட்டில் இல்லாத நிலையில், 9 வயது சிறுவனை குளுாரினை கரைக்குமாறு கோரியுள்ளனர்.

அச்சிறுவனும் அவர்கள் குறிப்பிட்டவாறே குளுாரினை கைகளால் கரைத்துள்ளான். பின்னர் குறித்த சிறுவனிடம் கரைத்த குளோரினை கிணற்றில் விடுமாறு குாரி திரும்பி சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

விசாரணை மேற்கொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் விஜய ஐங்கரன் இன்று காலை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் 9 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டதுடன், அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டார்.

குளோரின் இடப்படும்போது முகத்திற்கு மாஸ் அணிந்துகொள்ளுமாறும், கையுறைகளை பயன்படுத்துமாறும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஊழியர்களிற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவு்ம, அவர்களையே அப்பணிகளை செய்யுமாறும் பணித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் குறித்த செயற்பாட்டிற்காக ,ஈடுபடுத்தப்பட கூடாது என்பது தொடர்பில் அவர்களிற்கு போதுமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர் ஐங்கரன், குறித்த இரு நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு பணித்ததற்கமைய தாம் இன்று நேரடியாக குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட அரசாங்க அதிபரிற்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நம்பக தன்மையான விசாரணை இடம்பெறும் எனவும், சம்மந்தப்பட்டவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், இது போன்று எவ்வித சம்பவங்களும் இடம்பெறாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net