வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்ட பிரதேசங்களில் குடிநீர் வசதிகளை ஏற்ப்படுத்த 200 நீர் இறைக்கும் இயந்திரங்கள்.
அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் அவர்கள் பிரதேச சபைகள் இருக்கிறது எனவும் அவற்றை அவர்களிடம் கையளிக்குமாறும் இராணுவத்தை கொண்டு எல்லாவற்றையும் செய்வதாயின் பிரதேச சபைகளை மூடிவிடுமாறும் ஆதங்கப்பட்டார்
அதனைத் தொடர்ந்து பிரதேச சபைகளிடம் ஒப்படைத்து ஆக்கள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தையும் எடுத்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது