மத்திய வங்கியில் மறைமுக சூழ்ச்சி? ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
மத்திய வங்கியில் சில மறைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மின்வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை மத்திய வங்கியில் சிலர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் போல் உள்ளது.
மஹிந்த ராஜபக்ச சட்டவிரோத பிரதமராக நியமிக்கப்பட்ட போது ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி குறைந்திருந்தது.
எனினும் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து செல்கிறது.
எனவே மத்திய வங்கியில் மறைமுகமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே மத்திய வங்கியில் உள்ள இவ்வாறான சூழ்ச்சியில் ஈடுபடுகின்றவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.