சீன-இலங்கை உறவுக்கான எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும்!
சீன-இலங்கை உறவுக்கான எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
’கடந்த ஓராண்டில், சீன-இலங்கை உறவு நிதானமாக வளர்ந்து, பல சாதனைகளைப் பெற்றுள்ளது. இரு நாடுகளின் பல்வேறு நிலையான பரிமாற்றங்களும் ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையும் மேலும் ஆழமாக்கப்பட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கிடையில் மனிதத்தொடர்பும், பண்பாட்டுப் பரிமாற்றமும் மேலும் நெருக்கமாக மாறியுள்ளன.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டு, இலங்கையில் வெள்ள வறட்சி பேரழிவு அதிகமாக நிகழ்ந்தன. இலங்கைக்கு சீனா 10 இலட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கியது.
மேலும், சீனாவால் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய சிறுநீரக நோய் மருத்துவமனை திட்டப்பணி தடையின்றி தொடங்கியது. இலங்கை இராணுவக்கழகக் கட்டிடம் முடித்துக்கொள்ளப்பட்டு, இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுடன் சேர்ந்து சீனத் தரப்பு கலந்தாலோசனை செய்து, 2018-2019ஆம் ஆண்டுக்கான சீன-இலங்கை பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தும்.
புத்தாண்டில் புதிய தோற்றம் ஏற்படும். புதிய வளர்ச்சி காலக்கட்டத்தை சீனாவும் இலங்கையும் வரவேற்கின்றன.
சொந்த நாட்டை முயற்சியுடன் உருவாக்கி, சீன-இலங்கை உறவுக்கான எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும். இலங்கைக்கான நம்பகத்தன்மையுள்ள அண்டை நாடாகவும், நல்ல நண்பராகவும், சீரான கூட்டாளியாகவும் சீனா எப்போதும் விளங்குகிறது.
இலங்கையில் அமைதி, நிதானம், செழுமையான வளரச்சி நனவாக்கலாம். இலங்கை மக்கள் இனிமையாக வாழ்க, சீன-இலங்கை நட்புறவு வாழ்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.