பல வருடங்களாக செப்பனிடப்படாத புல்மோட்டை வீதி! மக்கள் விசனம் !
திருகோணமலை – புல்மோட்டை நான்காம் வட்டத்திற்குட்பட்ட ஹமாஸ் நகருக்குரிய வீதி செப்பனிடப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இது வரையிலும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.