கோவில்பட்டியில் வைகோ, பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டி- மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1aa
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா ஆகியவை இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

veeralakshmilong

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் இன்று தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன்படி கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுகிறார். அதன் விவரம்:

1) வைகோ – கோவில்பட்டி
2) திருப்போரூர் – மல்லை சத்யா
3) காரைக்குடி – செவந்தியப்பன்
4) ஆலங்குடி – மருத்துவர் சந்திரசேகரன்
5) செஞ்சி – ஏ.கே.மணி
6) மதுரை தெற்கு – பூமிநாதன்
7) ஆற்காடு – உதயகுமார்
8) உசிலம்பட்டி – பாஸ்கர சேதுபதி
9) சாத்தூர் – ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்
10) ஜெயங்கொண்டம் – கந்தசாமி

11) அரவக்குறிச்சி – கலையரசன்
12) முதுகுளத்தூர் – ராஜ்குமார்
13) தாராபுரம் – திருவள்ளுவன்
14) பல்லாவரம் – வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர்)
15) பல்லடம்- முத்துரத்தினம்
16) ஆயிரம் விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி
17) கிணத்துக்கடவு – ஈஸ்வரன்
18) சங்கரன்கோவில்- சதன்திருமலைக்குமார்
19) சிங்காநல்லூர் – அர்ஜுன்ராஜ்
20) ஆவடி – அந்திரிதாஸ்

21) துறைமுகம் – முராத் புகாரி
22) பூந்தமல்லி (தனி) – கந்தன்
23) ஈரோடு மேற்கு – முருகன்
24) குளச்சல் – சம்பத் சந்திரா
25) திருச்சி கிழக்கு – டாக்டர் ரொஹையா
26) அண்ணாநகர் – மல்லிகா
27) தூத்துக்குடி – பாத்திமா பாபு
28) நாகர்கோவில் – ராணி செல்வின்
29) பாளையங்கோட்டை – நிஜாம்

Copyright © 0634 Mukadu · All rights reserved · designed by Speed IT net