2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்!

2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்!

சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட்டியலிலுள்ள மற்றைய ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் சர்வதேச மீட்புக் குழுவால் பெயரிடப்பட்டுள்ளன.

ஆயுத மோதல்கள் அல்லது பொருளாதார சரிவு உள்ளிட்ட மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துகளும் வறட்சி, வெள்ளம் மற்றும் பிற காலநிலை தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட இயற்கையான ஆபத்துகளும் மனிதாபிமான பேரழிவுகளாக கருதப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள 42 நாடுகளில் கிட்டத்தட்ட 132 மில்லியன் மக்களுக்கு 2019 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உட்பட மனிதாபிமான உதவி தேவைப்படுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net