யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்!
யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம் என நோர்வே தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஒஸ்லோ பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் இதனை தெரிவித்துள்ளார்.
ஆதவன் செய்திபிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
”யுத்தம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அது முதலில் நடைபெற வேண்டும். அதுவும் உள்நாட்டு விசாரணையாளர்களின் மூலமின்றி, சர்வதேச விசாரணையாளர்களின் மூலம் இடம்பெற வேண்டும்.
முறையான விசாரணைகளின் பின்னரே பொறுப்புகூரல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.