40 இலட்சத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி!
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி தமிழில் “மாரி 2” மற்றும் சூர்யாவுடன் “என்.ஜி.கே” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகிய “படி படி லேஞ்சு மனசு” என்ற தெலுங்கு திரைப்படம் ஆந்திராவில் பல திிரையரங்குகளில் வெளியாகிய போதும் தோல்வியை தழுவியது.
இதன் காரணமாக சாய் பல்லவி தனக்கு பேசப்பட்ட சம்பள தொகையில் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபாயை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாய் பல்லவியின் இந்த செயலை தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்கள் பலர் பாராட்டியுள்ளனர்.