அனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி.

அனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி.

இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து தந்தையொருவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைபாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு நேற்றைய தினம்(11-01-2019) கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருந்தது.

விசாரணையின் நிறைவில் கிளிநொச்சி நகரில் பழைய கச்சேரிக்கு பின்புறமாக வசிக்கின்ற த.குயிலன் என்ற மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்குமாறும் அதுவே நியாயத் தன்மையானது என்று தெரிவித்து குறித்த மாணவனை எதிர் வரும் 17 ஆம் திகதி பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுதியுள்ளது.

குறித்த மாணவன் தரம் ஐந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை யாழ் அச்சுவேலியில் இருந்து கிளிநொச்சியில் உள்ளன பாடசாலையில் ஒன்றில் க.பொ.த உயர்தரத்திற்கு இணைந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் ஒருவனும் மனித உரிமைக்ள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு கவனத்தில் எடுக்கப்பட்டு மாணவனின் விசாரணை மேற்கொண்ட போது மாணவன் அச்சுவேலியிலிருந்து கிளிநொச்சியில் உள்ள பாடசாலையில் சேர்வதற்காக முன் வைக்கப்பட்ட காரணங்கள் நியாயத்தன்மையற்றது என்ற காரணத்தினால் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டை தள்ளுபடி செய்து விட்டது.

Copyright © 3198 Mukadu · All rights reserved · designed by Speed IT net