வவுனியாவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து இறப்பு

வவுனியாவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து இறப்பு

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளர்.

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரட்டை பெரியகுளத்திற்கு அருகே ஐந்து இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் ஒருவர் தவறி வீழ்ந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற மற்றைய இளைஞரும் தவறி வீழ்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தாக் கல்லூரியின் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய திபின்சன் மற்றும் கரிகரன் ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net