6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது!
கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
53 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடுவலை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.