ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்!

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்!

எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் பாதணிகள் என்பன கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, கல்வி செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை என்பன தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தினார்.

அதற்கமைய எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net