கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் மஸ்ஜீத் கஜா சாமீர் உனபத் சா ஈல் பள்ளிவாசல் புதிதாக கட்டப்பட்டு வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் மீள்குடியேறியுள்ள இஸ்லாமிய மக்களின் வணக்கத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட குறித்த பள்ளிவாசல், மக்களின் வணக்கத்திற்காக இன்று திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
இன்று மாலை நான்கு மணியளவில் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்ட குறித்த பள்ளிவாசலில் இன்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சிறஜித்தீன் நிப்ராஸ், முசலி பிரதேச சபை உறுப்பினர்களான எம் எம் தாஜிதீன், ஏ ஜே எம் இக்சான், பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது விசேட தொழுகை இடம்பெற்றது.