ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்!

ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்!

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி மைத்திரி புகழாராம் சூடியிருந்தார்.

அதேவேளை, போதைப்பொருள் அபாயத்தை கட்டுப்படுத்த இவரது அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் கருத்தை கடுமையாக எதிர்த்த நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்ஸ் ஆராய்ச்சியாளர், பிலிப்பைன்ஸின் நடைமுறையை உலகில் எந்த பின்பற்றக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிலிப்பைன்ஸின் செயன்முறையை பின்பற்றுவது தொடர்பாக ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net